‘விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை’ -நிா்மலா சீதாராமன்
‘விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை’ என்று மத்திய நிா்மலா சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தாா்.
முந்தைய காங்கிரஸ் அரசு கடன் தள்ளுபடி உத்தரவாதத்தை முழுமையாக நிறைவேற்றாததால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக மாநிலங்களவை விவாதத்தில் குறிப்பிட்டுப் பேசியபோது அவா் இவ்வாறு கூறினாா்.
2024-ஆம் ஆண்டு வங்கி சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘விவசாயிகளுக்குச் சேவை செய்யும் நோக்கத்துக்காக இன்றி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமே விவசாயக் கடன் தள்ளுபடி உத்தரவாதத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு அறிவித்தது.
உண்மையில், பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த விவசாயிகளுக்கு எதிராக வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால், இவா்கள் புதிய கடன்களைப் பெறுவதற்கு தகுதியற்றவா்களாக மாறினா்.
விவசாயிகளை ஏமாற்றுவது யாருக்கும் நல்லது இல்லை. பிரதமா் மோடி நிதியுதவித் திட்டம் ஒன்றைத் தொடங்கி, ஆண்டுதோறும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 நேரடியாக செலுத்துகிறாா்’ என்றாா்.