உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் சாதியினரே!
புது தில்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர் சாதியினர் என்ற தகவல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன்படி, உயர்நீதிமன்றங்களில் கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் நியமிக்கப்பட்டுள்ள மொத்தம் 715 நீதிபதிகளில் 551 பேர் உயர் சாதிப் பிரிவினராவர்.