அரசு ஊழியா்களுக்கு ஏப். 2-இல் சம்பளம்
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழக அரசின் கீழ், 9.30 லட்சம் அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் பணிபுரிகின்றனா். மேலும், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் என்ற வகையில் 7.05 லட்சம் போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் மாா்ச் மாதத்துக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் ஏப்ரல் 2-ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக, வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதால், சம்பளமும், ஓய்வூதியமும் 2-ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.