மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கு. இராசசேகரன்
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து 587 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(மார்ச் 30) காலை 108.25 அடியில் இருந்து 108.20 அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 425 கன அடியிலிருந்து வினாடிக்கு 587 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் இருப்பு 75.87 டிஎம்சியாக உள்ளது.