செய்திகள் :

எரிவாயு டேங்கர் லாரிகள் 4-ஆவது நாளாக இன்றும் வேலைநிறுத்தம்!

post image

நாமக்கல்: எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் 4-ஆவது நாளாக இன்றும்(மார்ச் 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வியாழக்கிழமை (மார்ச் 27) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் நாடு முழுவதும் 24,000 டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.ஒப்பந்தக் காலம் முடிவடையும் நிலையில், 2025 - 2030ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ஆம் தேதி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் பேச்சு நடத்தினர். அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வு அளிக்கப்படவில்லை.

இதனால், எண்ணெய் நிறுவனங்களின் தென்மண்டலத்துக்கு உள்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து எரிவாயுவை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் இயக்கப்படும் 4,000 டேங்கர் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி, வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ரு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்ரு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையால் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி!

செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர்.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோவில் அருகே திருத்தேரி சிக்னலில் நின்ற கார் மீது பி... மேலும் பார்க்க

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன... மேலும் பார்க்க