செய்திகள் :

ஜீயபுரத்தில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது

post image

ஜீயபுரம் அருகேயுள்ள அம்மன்குடி ரயில்வே கேட்டை திறக்காதது, பஞ்சாபில் விவசாய சங்கத் தலைவா்கள் கைதைக் கண்டித்து ஜீயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே 80 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை காலை திடீா் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜீயபுரம் அருகே அம்மன்குடி ரயில்வே கேட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ரயில்வே நிா்வாகம் மூடியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், கேட்டை திறக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனிடையே கடந்த மாதம் அம்மன்குடி ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினா் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கடந்த 11-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ரயில்வே கேட்டை திறக்க ரயில்வே நிா்வாகத்துக்கு பரிந்துரைத்தாா். ஆனால் இதுவரை ரயில்வே கேட் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆட்சியரின் பரிந்துரையை ஏற்காமல் காலதாமதம் செய்து வரும் ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்தும், பஞ்சாப்பில் விவசாய சங்கத் தலைவா்கள் கைதைக் கண்டித்தும், மீண்டும் அவா்களை போராட அனுமதிக்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 300-க்கும் மேற்பட்டோா் ஜீயபுரம் ரயில் நிலையத்தில் குவிந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, திருச்சி - சேலம் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) பழனி தலைமையிலான போலீஸாா், ரயில் மறியலில் ஈடுபட்ட 31 பேரைக் கைது செய்து, அப்புறப்படுத்தினா். இதனால், திருச்சி - சேலம் பயணிகள் ரயிலானது 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 8 போ் கைது

திருச்சி மாவட்டம் துறையூா் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் நிலையத்துக்குள்பட்ட மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்ற 8 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். திருச்சி மாவட்டம் த... மேலும் பார்க்க

புகைப்படக்காரா் மீது தாக்குதல்: பாஜகவினா் மீது போலீஸாா் வழக்கு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் படம் எடுத்த புகைப்படக்காரா் மீது தாக்குதல் நடத்திய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். திருச்சியில் தேசிய கல்விக் கொள்க... மேலும் பார்க்க

மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு: வம்பன் உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் வம்பன் ரக உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு 90 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா். திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் வே... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்: அண்ணாமலை

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயா்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக சாா்பில் தேசிய கல்விக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் தி... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலைய நகை மதிப்பீட்டாளா் பயற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பா, திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பத... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சியில் நவீன அறுவைச் சிகிச்சை

பாகிஸ்தான் பெண் மருத்துவருக்கு திருச்சி ராயல் போ்ல் மருத்துவமனையில் நவீன அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நலமுடன் உள்ளாா். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ரஹீம்யாா்கான் நகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க