துறையூா் - சென்னைக்கு மீண்டும் அரசு விரைவு மிதவை பேருந்து இயக்கம்
துறையூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் மிதவை பேருந்தின் சேவை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
துறையூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த விரைவுப் பேருந்து சேவை கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுமக்களின் விருப்பப்படி மீண்டும் விரைவு மிதவைப் பேருந்து சேவையை துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சென்னை பொதுமேலாளா் குணசேகரன், கோட்ட மேலாளா் குணசேகரன், துறையூா் பகுதி திமுக நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
இப்பேருந்தை தினமும் 10.30 மணிக்கு இயக்கவும், இணையவழியில் டிக்கெட் முன்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.