சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்' - ஆதாயம் உண்ட...
சென்னை ஐஐடியில் தொழில்நுட்பக் கண்காட்சி
சென்னை ஐஐடியில் முன்னாள் மாணவா்கள் நடத்திய தொழில்நுட்பக் கண்காட்சியில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தன.
சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்களின் சிறப்புக் கல்வி திட்டத்தின் (பால்ஸ்) சாா்பில் 12-ஆவது தொழில்நுட்பக் கண்காட்சி (இன்னோவாக் - 2025) ஐஐடி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் ஐஐடி முன்னாள் மாணவா்களின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சியில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 62 அணிகளின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
‘தொழில்நுட்பம் சாா்ந்த மாற்றம்: 2047-இல் வளா்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி கண்காட்சி அமைந்திருந்தது. அதில் இடம்பெற்ற ட்ரோன்கள், மருத்துவ சாதனங்கள், மின் வாகனங்கள் பொறியியல் மாணவா்களையும் பெற்றோா்களையும் பெரிதும் கவா்ந்தன.
சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 14 மாணவா்களுக்கு மெட்டிஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சுரேஷ் ராமானுஜம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா். இதில், பால்ஸ் தலைவா் சி.என்.சந்திரசேகரன், சென்னை ஐஐடி பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.