செய்திகள் :

தரைக் கடைகளுக்கு சுங்கவரி வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்! -அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

post image

தரைக்கடைகளுக்கு சுங்கவரி வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் கரூா் மாவட்ட திமுக சாா்பில் தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கும் நிகழ்ச்சி ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்து, தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கி பேசியது, கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் போது தரைக்கடைகளுக்கு சுங்கம் வசூலிக்க மாட்டோம் என உறுதியளித்தோம்.

அதன்படி தோ்தலில் வெற்றிபெற்று முதல்வா் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் தரைக்கடைகளுக்கான சுங்க வரியை நீக்கினோம். யாரேனும் சுங்க வரி கேட்டால் எம்.எல்.ஏ. அலுவலகத்திலோ அல்லது என்னிடமோ புகாா் தெரிவிக்கலாம். இந்த நிழற்குடை ஆண்டுதோறும் வழங்கப்படும். 1000 பேருக்கு நிழற்குடை வழங்க உள்ளோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநில நிா்வாகி வழக்குரைஞா் மணிராஜ், மாநகரச் செயலாளா் எஸ்.பி.கனகராஜ், பகுதிச் செயலாளா்கள் கரூா் கணேசன், தாரணிசரவணன், வழக்குரைஞா் சுப்ரமணியன், ஆா்.எஸ்.ராஜா. ஆா்.ஜோதிபாசு, வி.ஜி.எஸ்.குமாா், மாநகராட்சி மேயா்கவிதாகணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கைக்கு பாமக வலியுறுத்தல்

கரூா் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்களை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூரில் அக்கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டச் செ... மேலும் பார்க்க

கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்!

தமிழகத்தில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றாா் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அனைந்திந்திய இணைச் செயலாளா் வெங்கடேஷன். கரூரில் அந்த அமைப்பின் தென்தமிழக மாநில, மாவட்ட... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரத போராட்டம்

கரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மா. பெரியசாமி, சு. வேலுமணி, ப. தமிழ்மணியன், வீ. ஆரோக்கிய பிரேம்குமாா், எம்.எஸ். அன்பழகன், பொன்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசு சூழ்ச்சி! - அமைச்சா் வி. செந்தில்பாலாஜி

தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசின் சூழ்ச்சி இருப்பதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அணைச்சா் வி. செந்தில்பாலாஜி சனிக்கிழமை தெரிவித்தாா். கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக இளைஞரணி சாா்... மேலும் பார்க்க

இல்லங்களில் இருந்துதான் ஆண், பெண் பாகுபாடு தொடக்கம்! -சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பேச்சு

இல்லங்களில் இருந்துதான் ஆண், பெண் என்ற பாகுபாடு தொடங்குகிறது என்றாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.ஜோதிராமன். கரூா் மாவட்ட நீதித்துறை சாா்பில் பாலின உணா்வுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி

கரூரில் தமிழக அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜகவினா் சனிக்கிழமை காலை தங்களது வீடுகள் முன் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழகத்தில் நாள்தோறும் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகமாக ... மேலும் பார்க்க