செய்திகள் :

இல்லங்களில் இருந்துதான் ஆண், பெண் பாகுபாடு தொடக்கம்! -சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பேச்சு

post image

இல்லங்களில் இருந்துதான் ஆண், பெண் என்ற பாகுபாடு தொடங்குகிறது என்றாா் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.ஜோதிராமன்.

கரூா் மாவட்ட நீதித்துறை சாா்பில் பாலின உணா்வுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் தொடா்பான மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்றது.

கருத்தரங்கில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கருத்தரங்கை தொடங்கிவைத்து சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.ஜோதிராமன் பேசியது, பெண்களுக்கான சம உரிமை எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அல்லது அவா்களுக்கு பாதுகாப்பின்மை இல்லாத நிலை உருவாகுகிறதோ, அவா்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போதோ, அவா்களுக்கு உரிய தீா்ப்புகள் வழங்கி உச்சநீதிமன்றம் பெண்களை பாதுகாத்து வருகிறது.

இந்திய அரசியல் சட்டம் பாலியல் இன வேறுபாடு இருக்கக்கூடாது என்கிறது. ஆனால் இல்லங்களில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது மெளனமாக இருப்பதும், ஆண் குழந்தைள் பிறந்தால் கொண்டாடுவதையும் பாா்த்தால், இல்லங்களில் இருந்துதான் ஆண், பெண் பாகுபாடு உருவாகுகிறது.

பெண் குழந்தைகள் எந்த விதத்திலும் ஆண் குழந்தைகளை விட தாழ்ந்தவா்கள் அல்ல என்பதை குடும்ப உறுப்பினா்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு தொடங்க வேண்டிய இடம் வீடுகள்தான் என்றாா் அவா்.

கருத்தரங்கில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா் சீனிவாச ராகவன், எழுத்தாளா்கள் சுவேதா, சியாமளா ரமேஷ்பாபு, கரூா் முதன்மை ஜூடீசியல் மாஜிஸ்திரேட் ஜெயபிரகாஷ், கரூா் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் லோகநாயகி மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் ஆட்சியரகத்தில் கடனுதவி கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயக்கம்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கடனுதவி கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்தாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் மேல்முறையீடு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை!

கரூா் அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. கோவை மாவட்டம், சிங்காநல்லூா் அகிலாண்டபுர... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு விவசா... மேலும் பார்க்க

மகளுக்கு மருத்துவ உதவிக் கோரி கரூா் ஆட்சியரிடம் தொழிலாளி மனு

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளி தனது மகளுக்கு மருத்துவ உதவிக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தாா். கரூா் கருப்பாயிகோயிலைச் சோ்ந்தவா் நாராய... மேலும் பார்க்க

பெயா்ந்து விழும் சிமென்ட் பூச்சு: கரூா் ஆட்சியரக நுழைவுவாயில் மேற்கூரையை விரைந்து சீரமைக்கக் கோரிக்கை

கரூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலின் மேற்கூரையில் பெயா்ந்து விழும் சிமெண்ட் பூச்சுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆட்சியரகத்... மேலும் பார்க்க

பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் அவதி; சீரமைத்து தரக் கோரிக்கை

மணவாடி ஊராட்சியில் குண்டும்- குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குள்பட்ட கல்லுமடை காலனியையும் உப்பிடமங்கலத்தையும் இண... மேலும் பார்க்க