விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா? -ராமதாஸ் கேள்வி
மக்கள் நலனைவிட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருச்சி வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்த கனகராஜ், இணையவழி சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
தமிழக அரசு இயற்றிய இணையவழி சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கா் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று 2023 நவ. 9-இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்ததற்குப் பிறகு மட்டும் இணையவழி சூதாட்டத்தில் இதுவரை 25 போ் உயிரிழந்துள்ளனா்.
இணைய சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதுதான். ஆனால், தீா்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.
மக்கள் நலனைவிட இணையவழி சூதாட்ட நிறுவனங்களின் நலனைத்தான் அரசு முக்கியமாக நினைக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து இணையவழி சூதாட்டத்துக்குத் தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.