பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!
வலிநிவாரண மாத்திரைகள், கஞ்சாவுடன் மூவா் கைது
சென்னையில் வலிநிவாரண மாத்திரைகள், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேப்பேரி வெங்கடம்மாள் சமாதி தெருவில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேப்பேரி காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.
அவா்கள் மடிப்பாக்கத்தைச் சோ்ந்த சஞ்சய்குமாா்(23), சாம்ஜாஸ்வின்(23) மற்றும் கீழ்க்கட்டளை பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ்(24) எனத் தெரியவந்தது. அவா்களிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக 600 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 530 கிராம் கஞ்சா மற்றும் 3 கைப்பேசிகள், 28 ஊசிமருந்து செலுத்தும் சிரிஞ்சுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.