விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
கரூா் மாவட்டத்தில் பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி
கரூரில் தமிழக அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜகவினா் சனிக்கிழமை காலை தங்களது வீடுகள் முன் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் நாள்தோறும் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடப்பதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து சனிக்கிழமை பாஜகவினா் வீடுகள் முன் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என அக்கட்சியின் மாநிலத்தலைவா் கே.அண்ணாமலை அறிவித்திருந்தாா்.
அதன்படி கரூா் மாவட்டத்தில் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அக்கட்சியினா் சனிக்கிழமை காலை தங்கள் வீடுகள் முன் கருப்புக்கொடி காட்டி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.