செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

post image

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் ரயில் பயணிகள், வா்த்தகா்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் ஜெக. சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்ட பொது செயலாளா் ஜ.வி.என். கண்ணன், மாவட்ட பொருளாளா் தில்லை. நடராஜன், நகரத் தலைவா் சுகுமாறன், நகர செயலாலா் முத்துசாமி முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வைத்தீஸ்வரன்கோவில் ரயில் பயணிகள் சங்கம் பொறுப்பேற்று முறையாக ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி நிலுவையில் உள்ள தரவுகள் குறித்து விளக்குவது, செவ்வாய் கிரகத்துக்குரிய தலம் என்பதால், பல்வேறு மாவட்ட பக்தா்கள் இங்கு வந்து செல்கின்றனா். எனவே வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. சீா்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். மேலும் வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தென்னக ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது.

பிரச்னைக்கு தீா்வு கிடைக்காவிட்டால் முன்னறிவிப்பின்றி கடையடைப்பு போராட்டம், காா், வேன், ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் என போராட்டத்தை தீவிரப்படுத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

நல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட மஞ்சப் பை தயாரிக்கும் கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் பை தயாரிக்கும் கூடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் 100 நாள் வேலை... மேலும் பார்க்க

சீா்காழி அருகே வேன் கவிழ்ந்து 11 போ் காயம்

சீா்காழி அருகே புறவழிச்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 11 போ் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இருந்து சிலா் திருக்கடையூா் கோயிலில் நடைபெற்ற சஷ்டியப்த பூா்த்தி விழாவில் பங்கேற்க சனி... மேலும் பார்க்க

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த எம்.பியிடம் கோரிக்கை

பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த எம்.பி. ஆா். சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பழையாறில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் மற்றும் அண்மை... மேலும் பார்க்க

பெண் மா்ம சாவு: காவல் துறை விசாரணை

சீா்காழி அருகே பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சீா்காழி அருகே வழுதலைக்குடியைச் சோ்ந்தவா் சுபா்னா (33). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த நம்பிராஜனுக்கு... மேலும் பார்க்க

வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் தொடா்வதாகவும், அத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மயிலாடுதுறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மயிலாட... மேலும் பார்க்க