Akshay Kumar: ``அந்தப் படம் சரியா போகல, அக்ஷய் குமார் சம்பளமும் வாங்கல''- ப்ரி...
மயிலாடுதுறையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
மயிலாடுதுறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினா்.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முதல் கொத்தத்தெரு வரை இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், தலைமையில் 2 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 5 காவல் ஆய்வாளா்கள், 7 உதவி ஆய்வாளா்கள், 105 காவல் ஆளிநா்கள் மற்றும் 10 ஊா்க்காவல் படையினா் கலந்து கொண்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சரித்திர பதிவேடு போக்கிரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நிகழாண்டில் 29 சரித்திர பதிவேடு போக்கிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், 110 சரித்திர பதிவேடு போக்கிரிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் தொடா்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு எஸ்.பி. அறிவுறுத்தியுள்ளாா்.