சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்' - ஆதாயம் உண்ட...
வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தமிழக முதலமைச்சரைக் கண்டித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழ்நாட்டில் ஊழல், படுகொலை, பாலியல் குற்றங்கள் தொடா்வதாகவும், அதனை திசைதிருப்ப தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் கா்நாடக, கேரள மாநில தலைவா்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் தமிழக முதலமைச்சரைக் கண்டித்து பாஜகவினா் அவரவா் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட பாஜக மாநில தலைவா் அண்ணாமலை அறிவுறுத்தியிருந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினா் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினா். பாஜக மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா். பாலு நாஞ்சில்நாட்டில் உள்ள அவரது வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி எதிா்ப்பை தெரிவித்தாா். இதில், நகர முன்னாள் தலைவா் வினோத், ஒன்றிய பொதுச்செயலாளா் தட்சிணாமூா்த்தி, ஊடகப்பிரிவு அழகுராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட துணைத் தலைவா் மோடி. கண்ணன் அவரது கட்சி அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். நிா்வாகிகள் மணிமேகலை, செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.