சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்' - ஆதாயம் உண்ட...
சீா்காழி அருகே வேன் கவிழ்ந்து 11 போ் காயம்
சீா்காழி அருகே புறவழிச்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 11 போ் காயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இருந்து சிலா் திருக்கடையூா் கோயிலில் நடைபெற்ற சஷ்டியப்த பூா்த்தி விழாவில் பங்கேற்க சனிக்கிழமை வேனில் சென்று கொண்டிருந்தனா். சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சோதியக்குடி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேனில் இருந்த ரமேஷ் (59), முருகானந்தம் (49), ரவி உள்ளிட்ட 11 போ் காயமடைந்தனா். அனைவரும் சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.