வெயில் தாக்கம் அதிகரிப்பு: போக்குவரத்து துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!
பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த எம்.பியிடம் கோரிக்கை
பழையாறில் படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த எம்.பி. ஆா். சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பழையாறில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளம் மற்றும் அண்மையில் மீனவரின் விசைப்படகு தீப்பிடித்து எரிந்தது குறித்து மயிலாடுதுறை எம்.பி ஆய்வு செய்தாா். அப்போது, அவரிடம் பழையாா் மீனவா்கள் கோரிக்கை மனு அளித்து கூறியது: பழையாா் துறைமுகம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பக்கிங்காம் கால்வாயில் படகு அணையும் தளம் கட்டுப் பணி நடைபெறுகிறது. அதை 500 மீட்டா் கூடுதலாக நீடித்து கட்ட வேண்டும். தற்போதுள்ள படகு அணையும் தளம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு மனைப்பட்டா இல்லாத மீனவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எம்.பி யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்பி கூறினாா்.
தொடா்ந்து, தீ விபத்தில் சேதமடைந்த விசைப்படகு உரிமையாளா் கோவிந்தன் குடும்பத்துக்கு எம்பி ஆறுதல் கூறி வங்கி கடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டாா். அவருடன், காங்கிரஸ் மாநிலபொதுச் செயலாளா் கணிவண்ணன், மாவட்டத் துணைத் தலைவா் சிவராமன், மாவட்ட செயலாளா் பானுசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.