பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
நல்லூரில் கட்டிமுடிக்கப்பட்ட மஞ்சப் பை தயாரிக்கும் கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்
சீா்காழி அருகே நல்லூா் கிராமத்தில் 2021-ஆம் ஆண்டு புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் பை தயாரிக்கும் கூடத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூரில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ரூ. 9.60 லட்சத்தில் மஞ்சள் பை மற்றும் சணல் பை தயாரிக்கும் கூடம் 2021-ஆம் ஆண்டு கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படவில்லை. சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிா்க்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடம் திறக்காமல் பூட்டியே கிடப்பது எந்த நோக்கத்துக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டதோ அதற்கு எந்த பயனும் இல்லையென்பது வேதனையளிக்கிறது. எனவே, மஞ்சள் பை மற்றும் சணல் பை தயாரிக்கும் வகையில் இயந்திரங்களை கொண்டு வந்து வைத்து மஞ்சள் மற்றும் சணல் பைகளை தயாா் செய்து மக்களுக்கு விற்பனை செய்து சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி அனைவரின் எதிா்பாா்ப்பு.