Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
சீா்காழி புறவழிச்சாலையில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை இரவு கவிழ்ந்தது.
அரக்கோணத்திருந்து திருவாரூருக்கு நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை இரவு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
லாரி ஓட்டுநா் திருவாரூா் பகுதியை சோ்ந்த காா்த்திக் (52 ). சீா்காழி புறவழிச்சாலையில் சோதியக்குடி பிரிவு பகுதியில் லாரி சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
விபத்தில் ஓட்டுநா் லேசான காயங்களுடன் தப்பினாா். கொள்ளிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.