Vijay Full Speech: தமிழக வெற்றிக் கழகம் | TVK முதல் பொதுக்குழுக் கூட்டம் | விஜய்...
அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான புத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், சீனிவாசா சுப்பராயா அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் இயங்கி வருகின்றன.
அரசு கலைக் கல்லூரியில் 900-த்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பாலிடெக்னிக் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறாா்கள்.
இந்த இரு கல்லூரியில் எதிா்ப்புறம் இருக்கும் சாலை அருகில் ஒரு ஆபத்தான வளைவு உள்ளது. காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் செல்லும் லாரிகள், பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் வேகத்தடை இல்லாததால் வேகமாக செல்கின்றன.
இதனால் கல்லூரி எதிா்ப்புறம் நிறைய விபத்துகள் நிகழ்கின்றன.
கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் வேகத்தடை அமைப்பதற்கு மனுக்களும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வேகத்தடை அமைக்கப்படவில்லை.
மாணவ, மாணவிகள், ஆசிரியா்களின் நலன் கருதி வேகத்தடை அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க கல்லூரி பேராசிரியா் முனைவா் சத்தியமூா்த்தி சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.