தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுற...
தருமபுரம் கல்லூரியில் விளையாட்டு விழா
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ம. தமிழ்மதி வரவேற்றாா். இயற்பியல் துறைத் தலைவா் பா. செந்தில்குமரன் வாழ்த்துச்செய்தி வாசித்தாா். உடற்கல்வி இயக்குநா் ஏ.வி. முத்துக்குமரன் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆணையா் டி. சச்சிதானந்தம் மற்றும் லயன் எஸ். சிவராமன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினா். மாணவருக்கான சுழற்கோப்பையை பி.காம் சிஏ மாணவா் பி. மோசஸ், மாணவிக்கான சுழற்கோப்பையை பி. காம் மாணவி எஸ். தரணி ஆகியோா் பெற்றனா். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் ஈஸ்வரிபாஸ்கரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை தமிழ்த்துறை இணை பேராசிரியா் ஜி.புவனேஸ்வரி தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் ஏ.வி.முத்துக்குமரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.