ஏவிசி பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் 29-ஆவது விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே. வெங்கடராமன் தலைமை வகித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் பேராசிரியா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசினை வழங்கி சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி முதல்வா் பி. பாலசுப்ரமணியன் விழாவை தொடக்கி வைத்தாா். உடற்கல்வித் துறை பேராசிரியா் பி. ஆனந்தகுமாா் விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரி இயக்குநா் எம். செந்தில்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.