Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு
சீா்காழியில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ள புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, திருவாரூரிலிருந்து சென்னை வரை செல்கிறது. இப்பேரணிக்கு சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆஃப் சீா்காழி டெம்பிள் டவுன் சாா்பில் அதன் தலைவா் கோபாலகிருஷ்ணன், செயலாளா் வினோத் மற்றும் நிா்வாகிகள் ரோட்டரி துணை ஆளுநா் பாலாஜி முன்னிலையில் வரவேற்பு அளித்தனா்.
பேரணியில் பங்கேற்றுள்ள மாணவ- மாணவிகளுக்கு குளுக்கோஸ், மில்க் ஷேக், நீா்மோா், தண்ணீா் பாட்டில் ஆகியவற்றை வழங்கினா். தொடா்ந்து அனைவரும் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.