`3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு ...
சாம்சன், ஜுரெல் அதிரடி போதவில்லை: 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் 6 ஓவரில் 94 ரன்கள் அடுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தது. இதுதான் ஒரு அணியின் 2ஆவது அதிகபட்ச ரன்களாகும்.
அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 242-6 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்களும் சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தார்கள்.
கடைசியில் ஷுப்மன் துபே 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அசத்தினார்.
சன்ரைசர்ஸ் சார்பில் ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங் தலா 2 விக்கெட்டுகளும் ஷமி, ஆடம் ஸாம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
இறுதியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப் பட்டியலில் 2 (+2.200) புள்ளிகளுடன் முதலிடத்தையும் பிடித்துள்ளது.