`3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு ...
SRH vs RR: `எந்த பாலையும் சாமிக்கு விடல'-கெத்து காட்டிய ஹைதராபாத்; போராடிய ராஜஸ்தான் பேட்டர்கள்
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நேற்றைய தினம் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதின. இன்றைய போட்டி ஐதராபாத் இராஜீவ் காந்தி மைதானத்தில் பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்கியது. இன்றைய போட்டியில் 286 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடியது ஹைதராபாத் அணி.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டமுடியாமல் 242 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான்
இன்றிவே போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த அணியின் ஓப்பனிங் பேட்மேன்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்த ட்ராவிஸ் ஹெட் அடுத்தடுத்த ஓவர்களில் சிக்ஸ், பவுண்டரி என பந்துகளை பறக்கவிடத் தொடங்கினார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் தீக்க்ஷனா வீசிய பந்தை ஜெய்ஸ்வால் பிடிக்க கேட்ச் அவுட் ஆனார் அபிஷேக் ஷர்மா. அதன் பிறகு களம் இறங்கிய இஷான் கிஷன், ட்ராவிஸ் ஹெட் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்கத் தொடங்கினார்.

இதனால் பவர் பிளே முடிவில் 96 ரன்கள் எடுத்தது ஐதராபாத் அணி. 7 வது ஓவரில் இஷான் கிஷன் அடித்த பந்தை சுபம் துபே கேட்ச் மிஸ் செய்தார். இதனால் பந்து பவுண்டரி சென்றது. 21 பந்துகளில் டிராவிஸ் ஹெட் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிஸ் பில்டிங்கால் ட்ராவிட் ஹெட் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறியது. எனவே ஒன்பதாவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவை பவுலிங் செய்ய களம் இறக்கியது. ஒன்பதாவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்தினால் கேட்ச் அவுட் ஆனார் டிராவிஸ் ஹெட். அதன் பிறகு களம் இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மீண்டும் அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார்.
பறக்கவிட்ட பேட்ஸ்மேன்கள்!
ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பவுலிங்கில் மட்டுமல்ல பீல்டிங்கிலும் சொதப்பியது. அணி கைக்கு வரும் கேட்சுகளைப் பிடிக்காமல் திணறியது. 25 பந்துகளில் இஷான் கிஷன் 50 ரன்களை எடுத்து அசத்தினார். 12வது ஓவரில் ஜாப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை அடுத்தடுத்து சிக்ஸர்களாக விளாசினார் இஷான் கிஷன். இதனால் ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் 300 ரன்கள் இலக்கு என்று பதாகைகளைக் காட்டி உற்சாகம் அடைந்தனர். 14வது ஓவரில் தீக்ஷனா வீசிய பந்தினால் நிதீஷ் ரெட்டி கேட்ச் அவுட் ஆனார்.

அதன் பிறகு களம் இறங்கிய க்ளாசென், 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். இஷான் கிஷன் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் என 47 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். 2025 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை இஷான் கிஷன். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 286 ரன்கள் எடுத்து அசத்தியது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி 286 ரன்கள் எடுத்ததால் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியல் முதல் 3 இடங்களில் ஹைதராபாத் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இமாலய இலக்கு - அதிரடி காட்டிய சஞ்சு -ஜூரேல்
287 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேசிங் செய்ய பேட்டிங்கில் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. ராஜஸ்தான் அணியின் இம்பேக்ட் பிளேயராக சஞ்சு சாம்சன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அவர் முதல் ஓவரிலியே ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி என விளாசத் தொடங்கினார். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் 4 ரன்னிலும், நித்திஷ் ரானா 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ராஜஸ்தான் அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். சிக்ஸ், பவுண்டரி என நின்று விளையாடிய சஞ்சு சாம்சன் ஒன்பதாவது ஓவரில் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பத்து ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான் அணி.

சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் ஹர்ஷல் படேல் வீசிய பந்தினால் கேட்ச் அவுட் ஆனார். 35 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த துருவ் ஜுரல், ஜாம்பா வீசிய பந்தால் கேட்ச் அவுட் ஆனார். அதன் பிறகு களமிறங்கிய ஹெட்மயர் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். இப்படி அடுத்தடுத்த விக்கெட் இழப்புகளால் ரன்கள் எடுக்க முடியாமல் திணறியது ராஜஸ்தான் அணி. 18வது ஓவரில் இஷான் கிஷனுக்கு சிறிய இஞ்சூரி ஏற்பட்டது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்து இலக்கை எட்ட முடியாமல் சுருண்டது. 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபாரமாக வெற்றி பெற்றது. கேப்டனாகக் களமிறங்கிய ரியான் பராக் பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் எதுவும் கைகொடுக்காமல் போனதில் மொத்தமாக ஆட்டத்தை தன் வசமாக்கியது ஹைதராபாத், பேட்டிங்கில் இயன்ற அளவுக்கு முயற்சி செய்தும் 242 ரன்களை மட்டுமே ராஜஸ்தானால் அடிக்க முடிந்தது.