DC vs LSG: "அஷுதோஷ் அல்ல இவர்தான் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்தார்" - தோல்விக்குப் பின் பன்ட்
ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி வரைப் போராடிய லக்னோ அணி இறுதி ஓவரில் டெல்லியிடம் வெற்றியைக் கோட்டைவிட்டது. முதலில் அதிரடியாக பேட்டிங் ஆடி 210 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்து, பந்துவீச்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திப் போராடிய லக்னோ அணி, டெல்லி வீரர் அஷுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கடைசி ஓவரில் வெற்றியை நழுவவிட்டது.

'அவர்தான் ஆட்டத்தை பறித்தார்'
தோல்விக்குப் பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், ``எங்களின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார்கள். ஒரு அணியாக ஒவ்வொரு ஆட்டத்திலிருந்தும் நேர்மையான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். எந்த அளவுக்கு அடிப்படை விஷயங்களைச் செய்கிறோமோ அந்த அளவுக்கு எதிர்காலத்தில் அது நமக்கு சிறப்பானதாக இருக்கும்.
தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டுகள் எட்டுத்தோம். இருப்பினும், அவர்கள் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தார்கள். ஒன்று ஸ்டப்ஸ் - அஷுதோஷ், மற்றொன்று விப்ராஜ் அஷுதோஷ். விப்ராஜ் நன்றாக விளையாடினார். அவர்தான் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்தார் என்று நினைக்கிறேன்.

இந்தப் போட்டியில் நிறைய அழுத்தத்தை உணர்ந்தோம். ஆனாலும், இப்போட்டியிலிருந்து நிறைய நேர்மையான விஷயங்களை எடுத்துக்கொள்கிறோம். இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டமும் ஒரு பங்கு வகித்தது. இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது என்றாலும், சிறப்பான கிரிக்கெட்டை நீங்கள் விளையாடவேண்டும்." என்று கூறினார்.
டெல்லி அணியில் ஸ்டப்ஸ் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய விப்ராஜ், அதிரடியாக 15 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி என 39 ரன்கள் அடித்து அஷுதோஷின் வேலையை எளிதாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play