`3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு ...
ராபின்ஹூட் டிரைலர்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் நிதின் நாயகனாகவும் ஸ்ரீ லீலா நாயகியாகவும் நடித்துள்ள ராபின்ஹூட் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ‘அதிதா சர்பிரைஸ்’ எனும் பாடலுக்கு கேதிகா சர்மா கவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.
இந்தப் பாடல் மார்ச்.10ஆம் தேதி வெளியான இந்தப் பாடலை ”ஹாட்டஸ்ட் சர்ப்ரைஸ் ஆஃப் தி இயர்” என படக்குழு புகழ்ந்தது.
சமூக வலைதளங்களில் இந்தப் பாடலின் நடன அசைவுகள் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சேகர் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் வரும் மார்ச். 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.