ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
இது மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி: நவீன் பட்நாயக்
தொகுதி மறுசீரமைப்பு என்பது மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஏழு மாநிலங்களின் கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் நவீன் பட்நாயக் பேசுகையில்,
மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம். மக்கள்தொகையை நாம் கட்டுப்படுத்திருக்காவிட்டால் மிகவும் பெருகி வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கும்.
மக்கள்தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்களை தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை குறைப்பது மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி. இதை உணர்ந்து, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்திய புறகே மத்திய அரசு கொது மறுசீரமைப்பை நடத்த வேண்டும்.
மேலும், 2026 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளை ஒடிசா இழக்கும். ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜு ஜனதாதளம் போராடும் என பட்நாயக் கூறினார்.