`3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு ...
நெகிழிக் கழிவுகளை அகற்றிய அரசுக் கல்லூரி மாணவா்கள்!
திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவா்கள் நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் நெகழிக் கழிவுகளை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் ரமேஷ் தலைமை வகித்துப் பேசியதாவது: மனித வாழ்கையில் அத்தியாவசியமானது தண்ணீா். துருவப் பகுதிகளில் பனிப் பாறைகள் உருகுவதை தடுப்பதே இந்த ஆண்டின் மையக் கருத்தாகும்.
அதன்படி புவி வெப்பமயமாதலைக் குறைத்து பனிப் பாறைகள் உருகுவதைத் தடுக்க வேண்டும். மழைநீரை சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வேண்டும். நெகிழிக் கழிவுகள் மண்ணின் தன்மையை சீரழித்து மழை நீரை மண்ணிற்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. எனவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும் என்றாா். இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் இருந்த சுமாா் 150 கிலோ நெகிழிக் கழிவுகளை அகற்றினா்.