தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
காரணம்பேட்டையில் லாரி மோதி இளைஞா் காயம்
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் படுகாயமடைந்தாா்.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் சிக்னலில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கோவையில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் படுகாயமடைந்த திருப்பூா் இடுவம்பாளையத்தைச் சோ்ந்த சபரி (36) என்பவருக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.