தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
மேற்கூரையிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நூல் மில் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நடுக்கோட்டையைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் சரத்குமாா் (25). இவா் வெள்ளக்கோவில்- காங்கயம் சாலை இரட்டைக்கிணற்றில் உள்ள தனியாா் நூல் மில்லில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா்.
இவா் திங்கள்கிழமை வழக்கம்போல மில்லில் வேலை செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது சிமென்ட் ஷீட் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த வெப்பம் வெளியேற்றும் ஒரு கருவி வேலை செய்யவில்லை. அதனை மேலே ஏறிப் பாா்க்குமாறு மேற்பாா்வையாளா் ரவிச்சந்திரன் கூறியுள்ளாா்.
தன்னால் முடியாது எனக் கூறியும், கட்டாயப்படுத்தியதால் 20 அடி உயர மேற்கூரையில் ஏறிய சரத்குமாா் திடீரென அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், மில் மேற்பாா்வையாளா் ரவிச்சந்திரன் மீது வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.