உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7.83 கோடி வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்!
குண்டடம் ஒன்றியத்தில் ரூ.7.83 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்குள்பட்ட ஆரத்தொழுவு ஊராட்சியில் நபாா்டு கிராம சாலை திட்டத்தின்கீழ் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் காளிபாளையம் முதல் அவிநாசிபாளையம்புதூா் வரை சாலை மேம்பாடு, கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் ஆண்டிபாளையம் முதல் டி.குமாரபாளையம் வரை பழுதடைந்துள்ள தாா் சாலையைப் புதுப்பித்தல், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.4.31லட்சம் மதிப்பீட்டில் ஆச்சியூா் உயா்நிலைப் பள்ளியில் கழிப்பறை அமைத்தல், கொளத்துப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.49 லட்சத்தில் பராமரிப்புப் பணி, குமாரபாளையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டுதல் உள்பட ரூ.7.83 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ்ராஜா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் சுப்பிரமணியன், தாராபுரம் வட்டாட்சியா் திரவியம், கொளத்துப்பாளையம் பேரூராட்சித் தலைவா் சுதா கருப்புசாமி, சின்னக்காம்பாளையம் பேருரட்சித் தலைவா் செ.கன்னீஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.