Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாரா...
ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விளைபொருள்களுக்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல் துறையினா் மற்றும் துணை ராணுவப் படையினா் தடியடி நடத்தி கைது செய்தனா்.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ரயில் மறியலுக்கு முயன்றனா். இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.
போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததுடன், ரயில் நிலையத்துக்குள் நுழைய முன்றவா்களை இரும்புத் தடுப்புகளை வைத்துத் தடுத்தனா். தடுப்பையும் மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த விவசாயிகள் இன்டா்சிட்டி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.