பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் உடல்கள் மீட்பு!
வழிப்பறி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூரில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாநகரம் அனுப்பா்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக நிகழ்ந்த வழிப்பறி வழக்கில் அருண்குமாா் (27) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், அருண்குமாா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருண்குமாரிடம் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.