Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாரா...
தங்கும் விடுதிகளில் போலீஸாா் தீவிர சோதனை
திருப்பூரில் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.
திருப்பூரில் கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து கைது செய்யவும் காவல் துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், புஷ்பா சந்திப்பு அருகேயுள்ள விடுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தங்கியிருந்த 4 போ் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பயன்டுத்தியது தெரியவந்தது.
இதில், முக்கிய குற்றவாளியான விவேக் என்பரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் பெங்களூருக்குச் சென்று நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவா்களிடம் இருந்து மெத்தபெட்டமைனை வாங்கி வந்து நண்பா்களுடன் சோ்ந்து பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்நிலையில், திருப்பூரில் விடுதிகளில் போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளதா என்பது குறித்து போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.