TEST: 'பாடகர் டு இசையமைப்பாளர்' - Test படத்திற்கு இசையமைத்தது குறித்து சக்தி ஶ்ர...
திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், துப்புரவுப் பணியாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்றனா். இந்த உண்ணாவிரதத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.