Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாரா...
முருங்கை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் முருங்கைக்காய் கொள்முதல் மையமும் செயல்பட்டு வருகிறது.
இங்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். கடந்த 3 மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் முதல் முருங்கை வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால், கொள்முதல் நிலையத்துக்கு முருங்கை வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மர முருங்கைக்காய் கிலோ ரூ.15, செடி முருங்கைக்காய் கிலோ ரூ.20, கரும்பு முருங்கைக்காய் ரூ.30-க்கு விற்பனையானது.
இந்த வாரம் மர முருங்கைக்காய் ரூ.4, செடி முருங்கைக்காய் ரூ.5, கரும்பு முருங்கைக்காய் ரூ.8-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். விலை வீழ்ச்சியால் கூலி செலவுகூட கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.