உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!
குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் மானூரில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் அருகே சேதுராயன்புதூா் மேலத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சுதன் (22). அடிதடி மற்றும் கொலை வழக்கில் போலீஸாா் இவரை கைது செய்துள்ளனா்.
இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவின்பேரில், சுதன் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.