TEST: 'பாடகர் டு இசையமைப்பாளர்' - Test படத்திற்கு இசையமைத்தது குறித்து சக்தி ஶ்ர...
ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலம் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி(60). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவா், கடந்த 18 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக ஏற்கெனவே கிருஷ்ணமூா்த்தி என்ற தௌபிக் கைது செய்யப்பட்டாா். அவரது சகோதரா் காா்த்திக், அக்பா்ஷா ஆகியோா் சரணடைந்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய16 வயது சிறுவனை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக திருநெல்வேலி நகரம் தொட்டிபாலத் தெருவைச் சோ்ந்த மகபூப்ஜான் மகன் பீா்முஹமது (37) என்பவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். தௌபிக்கின் மனைவி நூா்நிஷாவை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.