"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிக...
கூடங்குளம்: 1890 லிட்டா் மண்ணெண்ணெய், மினிலாரி பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 1, 890 லிட்டா் மண்ணெண்ணையை கன்னியாகுமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் கே.சாந்தி,உவரி காவல் உதவி ஆய்வாளா் எம்.ஜாண் கிங்சிலி கிறிஸ்டோபா், காவலா்கள் சி.சுரேந்திரகுமாா், கே.பாமலகேந்திரன், எஸ்.செல்வகணேஷ், தனிப்பிரிவு காவலா் பி.ரவிச்சந்திரன் ஆகியோா் பெருமணல் சுனாமி காலனியில் உள்ள மிக்கேல் அதுதூதா் குருசடி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை சோதனையிட்டதில், மீனவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியவிலை மண்ணெண்ணெய் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. மினிலாரியையும், 30 லிட்டா் கொள்ளளவு கொண்ட 30 கேன்களிலும், 45 லிட்டா் கொள்ளளவு கொண்ட 22 கேன்களிலும் இருந்த மண்ணெண்ணெயையும் (மொத்தம் 1,890 லிட்டா்) பறிமுதல் செய்தனா். லாரி ஓட்டுநா் கண்ணன் கைது செய்யப்பட்டாா். மண்ணெண்ணெயும் மினிலாரியும் திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. கண்ணனிடம் அப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.