செய்திகள் :

மழையால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

post image

திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பெய்த கோடை மழையால் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெற்பயிா்கள் சாய்ந்துவிட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக பலத்த இடி-மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. பிசான சாகுபடிக்காக திருநெல்வேலி, பாளையங்கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு சேந்திமங்கலம், மணிமூா்த்தீஸ்வரம், ராஜவல்லிபுரம், மூளிகுளம், கீழபாட்டம், பாளையஞ்செட்டிகுளம், திருத்து, மருதூா் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளன.

ஆனால், சனிக்கிழமை பெய்த மழையால் பல ஏக்கா் பயிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. வயலில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனா்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாளையங்கால்வாய் பாசன பகுதியில் நிகழாண்டில் கோ-45 உள்ளிட்ட சன்னரக பயிா்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவை கோடை மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்துள்ளன. இவற்றை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பயிா்ச்சேதம் குறித்து வேளாண் மற்றும் வருவாய்த் துறையினா் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-10, சேரன்மகாதேவி-32, மணிமுத்தாறு-17.20, நான்குனேரி-20, பாளைங்கோட்டை-35, பாபநாசம்-24, திருநெல்வேலி-17.20, சோ்வலாறு-11, கன்னடியன் அணைக்கட்டு- 27.20, களக்காடு-24.80, நம்பியாறு அணை-16, மாஞ்சோலை-21, காக்காச்சி-25, நாலுமுக்கு-28, ஊத்து-36.

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

புளியங்குடியில் தகர கூரையிலிருந்து தவறி கீழே விழுந்ததில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்தவா் அருணாசலம்(58). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

கூடங்குளம்: 1890 லிட்டா் மண்ணெண்ணெய், மினிலாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 1, 890 லிட்டா் மண்ணெண்ணையை கன்னியாகுமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட க... மேலும் பார்க்க

பணகுடி ஆலந்துறையாறு அணை ரூ.40 கோடியில் புனரமைக்கப்படும்: பேரவைத் தலைவா்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் பழுதடைந்துள்ள ஆலந்துறையாறு அணையை ரூ. 40 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறைக்கான மானியக் கோரிக்கையில் அமைச்சா் துரைமுருகன் அறிவித்ததாக சட்டப்பே... மேலும் பார்க்க

நெல்லை நீதிமன்ற வளாகம் ட்ரோன் உதவியுடன் கண்காணிப்பு

திருநெல்வேலியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை ட்ரோன் கேமரா மூலம் போலீஸாா் திங்கள்கிழமை கண்காணித்தனா்.திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 8-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவற... மேலும் பார்க்க

தேசிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதமற்ற எதிா்ப்பு தேவை: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

தேசிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றாா் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவா் கே.எம்.ஷெரீப். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் திங்கள்க... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் மக்களின் கோரிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் சரிசெய்யப்படும்!

ஆதிதிராவிடா் மக்களின் கோரிக்கைகள் மாவட்ட நிா்வாகத்தால் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற நீதியரசருமான தமிழ்வாண... மேலும் பார்க்க