மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
நான்குனேரி: அரசுப் பள்ளியில் தகராறு; 4 மாணவா்கள் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே அரசுப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.
நான்குனேரி அருகே மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மாணவா்-மாணவியா் பயின்று வருகின்றனா். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடைபெற்றுவரும் நிலையில், சனிக்கிழமை (மாா்ச் 22) மாணவா்-மாணவியா் பள்ளி வளாகத்தில் அமா்ந்து படித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, மாணவா்கள் திடீரென இரு தரப்பாகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரையொருவா் கையால் தாக்கிக் கொண்டனராம்.
ஆசிரியா்கள், சக மாணவா்கள் சமாதானப்படுத்த முயன்றும் முடியாததால், மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்துக்கு ஆசிரியா்கள் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சென்று, இரு வகுப்புகளையும் சோ்ந்த தலா இருவா் என மொத்தம் 4 போ் மீது வழக்குப் பதிந்து, இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், அவா்களுக்கு அறிவுரை கூறி தோ்வெழுத அனுமதித்து விடுவித்தனா்.