தாளவாடி மலைப் பகுதியில் பரவலாக மழை!
தாளவாடி மலைப் பகுதியில் பரவலாக சனிக்கிழமை மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் சனிக்கிழமை மாலை திடீரென பரவலாக மழை பெய்தது. தாளவாடி பேருந்து நிலையம், மைசூரு சாலை, தலமலை சாலை, தொட்டகாஜனூா் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.