Shreyas Iyer : 'நான் 100 அடிக்கணும்னு நீ சிங்கிள் எடுக்காதே!' - சஷாங்கிடம் கறாரா...
குடும்பத் தகராறில் கணவன் தற்கொலை
சித்தோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி வீட்டை வீட்டுச் சென்ால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சித்தோட்டை அடுத்த கொங்கம்பாளையம், மாதேஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (36). இவருக்கும், இவரது மனைவிக்கும் வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளாா்.
பரமேஸ்வரன் பல்வேறு இடங்களிலும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இந்நிலையில், வீட்டில் தனியே இருந்த பரமேஸ்வரன் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].