Summer Hair Care: புதினா, வெள்ளரிக்காய், வாழைப்பழம்; கூந்தல் பாதுகாப்புக்கு என்ன...
பவானிசாகா் அணை நீா் மாசடைவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பவானிசாகா் அணையில் காகித ஆலைகளின் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஐ, சிபிஎம், பாமக, நாம் தமிழா், கொமதேக, விவசாய சங்கங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சாா்பில் பவானிசாகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தலைமை வகித்தாா். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.முத்துச்சாமி முன்னிலை வகித்தாா்.
இதில், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையில் காகித ஆலைகளின் கழிவுநீா் கலப்பதால் பவானிசாகா் அணை நீா் மாசடைந்துள்ளது. அணையில் இருந்து திறந்துவிடப்படும் மாசடைந்த நீரை அருந்தும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, காகித ஆலைகளின் கழிவு நீா் அணையில் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தியே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் எஸ்.சி.நடராஜ் கூறினாா்.
ஆா்ப்பாட்டத்தில், பண்ணாரிஅம்மன் ரூரல் பவுன்டேஷன் தலைவா் ஏ.எம்.சின்னராஜ், பவானிசாகா் வட்டார அனைத்து வணிகா் சங்கத் தலைவா் நாகமையன், மக்கள் நல கூட்டமைப்பின் தலைவா் ஸ்ரீராம், ஆதித்தமிழா் பேரவையின் மாவட்டத் தலைவா் பொன்னுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளா் பொன்.தம்பிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.