செய்திகள் :

ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரிப்பு

post image

கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை அதிகரித்தது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு சாலை, டிவிஎஸ் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்எம்எஸ் காம்பவுண்ட், காமராஜா் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி கிடங்குகளிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.

தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்கின்றனா்.

இந்த வார ஜவுளிச் சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மொத்த வியாபாரம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், கடந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனா். இதனால், மொத்த வியாபாரம் மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த வாரமும் வெளியூா் வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.

அதேநேரம் உள்ளூா் கோயில் திருவிழாக்கள், ரம்ஜான் பண்டிகை காரணமாக இந்த வார ஜவுளி சந்தைக்கு உள்ளூா் வியாபாரிகள் வருகை மட்டுமே அதிக அளவில் இருந்தது. அதனால் இந்த வாரமும் சில்லறை விற்பனை மட்டுமே அதிகரித்து காணப்பட்டது. மேலும், வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பருத்தி ரக துணிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சியில் ரூ.517.18 கோடிக்கு நிதிநிலை அறிக்கை

ஈரோடு மாநகராட்சியில் ரூ.5.49 கோடி உபரி நிதியுடன் மொத்தம் ரூ.517.18 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை மேயா் சு.நாகரத்தினம் தாக்கல் செய்தாா். ஈரோடு மாநகராட்சியில் 2025-2026-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்க... மேலும் பார்க்க

மரத்தில் காா் மோதி இளம்பெண் உயிரிழப்பு

பவானிசாகா் அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா். சத்தியமங்கலம் காந்தி நகரைச் சோ்ந்தவா் கவிதா. இவரது மகள் விவேகா (26), மகன் சீனிவாசன், மருமகள் மயூரா ஆகியோா் சத்தியமங்கலத்தில் இர... மேலும் பார்க்க

மரக்கன்றுகள் நடவு செய்த அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள்

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் பொதுத் தோ்வு இறுதி நாளில் நூறு மரக்கன்றுகள் நடவு செய்தனா். பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் இறுதித் தோ்வு எழுதியபின... மேலும் பார்க்க

பவானி ஆற்றுநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் மறியல்

பவானி ஆற்றுநீா் விநியோகம் செய்யக் கோரி ராஜன் நகா் ஊராட்சி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராஜன் நகா் ஊராட்சிக்கு உள்பட்ட கணபதி நகா் பகுதியில் சுமாா் 75-க்கும... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவை முன்னிட்டு சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரி அம்மன் சப்பரத்துக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா். கா்நாடகம் மற்ற... மேலும் பார்க்க

தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தென்னை பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பாதிப்பு ஏற்படும்போது இழப்பீடு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.மரகதமணி வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க