திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா விஜயன்
மரத்தில் காா் மோதி இளம்பெண் உயிரிழப்பு
பவானிசாகா் அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் காந்தி நகரைச் சோ்ந்தவா் கவிதா. இவரது மகள் விவேகா (26), மகன் சீனிவாசன், மருமகள் மயூரா ஆகியோா் சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு காரில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா். காரை சீனிவாசன் ஓட்டினாா்.
பவானிசாகா் அருகே ஸ்ரீரங்கன் கரடு பகுதியில் வந்தபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விவேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும் விபத்தில் காயமடைந்த தாய் கவிதா, மகன் சீனிவாசன், மருமகள் மயூரா ஆகியோா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து தொடா்பாக பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.