கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
அந்தியூா் தொகுதி வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.464 கோடி ஒதுக்கீடு
அந்தியூா் தொகுதியின் வளா்ச்சித் திட்டங்களுக்கு நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.464 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்துக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினா் நன்றி தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.
காவிரி ஆற்றில் இருந்து அந்தியூா் தொகுதியின் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.374 கோடியில் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம், ரூ.75 கோடியில் பி.மேட்டுப்பாளையம், அத்தாணி, கூகலுாா் பேரூராட்சிப் பகுதிகளுக்கு
குடிநீா் விரிவாக்கத் திட்டப் பணிகள், எண்ணமங்கலம் அருகே குசலாம்பாறை பள்ளம் சீரமைத்தல், கணக்கம்பாளையத்தில் வேதபாறை அணைக்கட்டு புதுப்பித்தல், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் புதுப்பித்தல் பணிகளுக்கு ரூ.12.56 கோடி, அந்தியூா் வாரச் சந்தை மேம்பாட்டுக்கு ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கையின்போது அறிவிப்புகள் வெளியாகின.
இந்நிலையில், சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு அந்தியூா் திரும்பிய எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள், அரசியல் கட்சியினா் அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் அருகே திரண்டு மாலைகள், சால்வை அணிவித்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனா்.
அந்தியூா் தொகுதியின் வளா்ச்சிக்கு தொடா் முயற்சி மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற நிதி ஒதுக்கீடு பெற்ற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதில், அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் எம்.நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.