மைலம்பாடியில் ரூ.30.97 லட்சத்துக்கு எள் ஏலம்
பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.30.97 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 274 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், வெள்ளை எள் கிலோ ரூ.115.09 முதல் ரூ.141.99 வரையிலும், சிகப்பு எள் ரூ.115.99 முதல் ரூ.142.19 வரையிலும், கருப்பு எள் ரூ.113.99 முதல் ரூ.189.69 வரையில் ஏலம்போனது. மொத்தம் 20,292.5 கிலோ எள் ரூ.30,97,854-க்கு விற்பனையானது.
2 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கொப்பரை கிலோ ரூ.115.69 முதல் ரூ.180.91 வரையில் ரூ.2,337-க்கும், 370 தேங்காய்கள் கிலோ ரூ.15.10 முதல் ரூ.28 வரையில் ரூ.5,906-க்கும், 2 மூட்டை மக்காச்சோளம் ரூ.22.69 வீதம் ரூ.4,198-க்கும், ஒரு மூட்டை உளுந்து ரூ.75.69 வீதம் ரூ.1,590-க்கும், ஒரு மூட்டை தட்டைபயிறு கிலோ ரூ.62.79 வீதம் ரூ.3,108-க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.31.11 லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.